24 மார்ச், 2009

என் கோபம் மக்கள் மீது...

இந்தியா ஒரு நாடா! எத்தனை ஜென்மம் ஆனாலும் திருந்தவேதிருந்தாது!! singapore-எப்படி தெரியுமா இருக்கும், அங்க road -ல buss ஸ்டாண்ட்-லன்னு எங்கேயும் குப்பை பார்க்க முடியாது அவ்ளோ கிளீனா இருக்கும். நீ குப்பை போடுறத எங்கிருந்த்துதான் பக்குவானோன்னு தெரியாது அடுத்த செகண்டே முன்னாடி வந்தது நிப்பான் போலீஸ். அங்க ரயில் கூட மழமழன்னு இருக்கும் நாம சீட்லதா உட்காரனனும்னு அவசியம் இல்ல கீழேயே உட்காந்துட்டு போலாம் அப்படி இருக்கும். இங்க ரயில் எவ்வளவு கேவலமா இருக்கு பார்.

இப்படி
சிங்கபூரின் அருமை பெருமைகளை ப(போ)ற்றி சொல்லிகொண்டிருந்தார் ரயிலில் என் இருக்கைக்கு எதிர் இருக்கையில் இருந்த பயணி.

இப்படி வாய்கிழிய பேசிய அவர், அவர் தின்று முடித்த biscuit பாக்கெட்டின் காலி பேப்பரை கொஞ்சம் கூட மனம்கூசாமல் அப்படியே ரயிலினுள் போட்டார்.
"யோவ்! இவ்ளோ வாய்கிழிய பேசினியே கொஞ்சம் கூட அறிவில்லாம ரயில் உள்ள குப்பை போடுறிய வெக்கமா இல்ல" என்றேன்.
sorry...sorry-என்ற படியே எடுத்து பைக்குள் வைத்து கொண்டார்.
இப்படித்தான் எல்லோரும் singapore-அப்படி இருக்கு,japan-இப்படி இருக்குன்னு வாய்க்கிழிய பேசுகின்றோம்,பேசுறோமே தவிர மாத்தணும்னு நினைக்ககூட மாட்டேங்கிறோம்,சட்டம் போட்டு fine-போட்டாத நீங்கல்லாம் பொது இடத்துல குப்பை கொட்டாம,எச்சில் துப்பாம இருப்பீங்க இல்ல,ஏன் உங்களுக்கா அந்த அறிவு வராதா?மனிதர்கள் தானா நாம?மத்ததுக்கெல்லாம் சிந்த்திக்குறோம் இதை ஏன் சிந்திக்கல?
கடந்த 2008 ஏப்ரல்-1 முதல் சென்னையில் பொது இடத்தில் குப்பை கொட்டக்கூடாது, எச்சில் துப்ப கூடாது,சிறுநீர் கழிக்க கூடாது என ஸ்டாலின் சட்டம் போட்டதா ஞாபகம் எனக்கு,அது என்ன ஆனதுன்னு நண்பனிடம் கேட்டால் ஸ்டலின்மக்களை april fool பன்னாருடா என்கிறான்.சரி அதை விடுங்க அக்டோபர்-2 முதல் பொது இடத்தில் புகை பிடிக்க தடைன்னு அன்புமணி ஒரு சட்டம் போட்டார்,அதோட நிலைமை எப்படின்னா அந்த ஒரு வாரத்துக்கு எல்லா பங்க் கடையிலும் இங்கு புகை பிடிக்ககூடாதுன்னு ஒரு அட்டைல எழுதி மாட்டிருந்தாங்க அதுவும் அந்த ஒரு வாரத்துக்குதான்,பிறகு பழைய கதைதான்.

ஊழல்வாதிகளின் ராஜ்ஜியமான நம் நாட்டில் "என் தேசம் என் மக்கள்" என்ற உணர்வு நமக்கு வராத வரை ஒன்றும் மாறாது.
மாற்றம் வேண்டுமெனில் நாம் மாறவேண்டும், நாம் மாற்றவேண்டும்.

(தொடர்வேன்)

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

I am realy appraciate you, mr. thilipan.